Home Celebrities 3000 குடும்பங்களுக்கு ரூ.5000: ஆக்‌ஷனில் இறங்கிய கேஜிஎஃப் ஹீரோ யாஷ்!

3000 குடும்பங்களுக்கு ரூ.5000: ஆக்‌ஷனில் இறங்கிய கேஜிஎஃப் ஹீரோ யாஷ்!

229
0

கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 3000 குடும்பங்களுக்கு ரூ.5000 வீதம் அவர்களது வழங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளைக் கடந்து இந்தியாவில் கடந்து ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மளிகைக் கடைகள் என்று அனைத்தும் மூடப்பட்டன. தினந்தோறும் அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழை எளிய மக்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது.

திரையுலகையே கதி என்று இருக்கும் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.  சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று பல அமைப்புகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது ஆக்‌ஷன் த்ரில்லர் கதையான கேஜிஎஃப் படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் யாஷ், சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். அதாவது, 3000 சினிமா தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5000 வீதம் நேரடியாக அனுப்ப முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி நம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இதில் எனது கன்னடத் திரைத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று நான் அறிவேன்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3000 குடும்பங்களுக்கு எனது சொந்த செலவில் ரூ.5000 வீதம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துகிறேன். இந்த கொரோனா சூழலில் இழப்புகளை சந்தித்திருக்கும் அவர்களுக்கு இது நிரந்தர தீர்வாகாது. இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அனைவருக்கும், நல்ல காலம் பிறக்கும் என்பதற்கான நம்பிக்கை மட்டும் இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஜிஎஃப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2 பாகமும் உருவாக்கப்பட்ட து. வரும் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுவதும் கேஜிஎஃப் 2 படம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here