எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வணக்கம் சென்னை படம் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக காட்டியவர் எம்.எ.ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கினார்.
தற்போது 3ஆவது படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாகவும், தன்யா ரவிச்சந்திரன் ஹீரோயினாகவும் நடிக்க இருக்கின்றனர். ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு இந்தப் படம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram