கொரோனா தடுப்பு பணிகளுக்காக இயக்குநர் லிங்குசாமி ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அண்மையில், சன் டிவி நிறுவனம் ரூ. 30 கோடி கொரோனா நிவாரண நிதியாக அளித்திருந்தது.
தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் வைத்திருந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள். பொது மக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த், ஜெயம் ரவி, நிதி அகர்வால், இயக்குநர் ஷங்கர், சிவக்குமார் குடும்பத்தினர், தல அஜித், விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ் என்று சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு இயக்குநர் லிங்குசாமி ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். சேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏவான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மணப்பாக்கத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஆசிரம்ம் திறந்து வைத்தார். ஆசிரமம் திறப்பு விழாவில் எம் எல் ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
. @dirlingusamy donated ₹ 10 Lakhs to TN CM Relief fund for #Covid Relief..
He handed over the cheque to @Udhaystalin MLA.. pic.twitter.com/Gmk4wJGP3F
— Ramesh Bala (@rameshlaus) May 31, 2021