இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் மாதவன். இவரது நடிப்பில் வந்த அலைபாயுதே இன்றும் ரசிகர்களால் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது போன்று மாதவன் நடிப்பில் வந்த படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மாதவன் ஒப்புக்கொண்டால், லிங்குசாமி இயக்க த்தில் மாதவன் நடிக்கும் 3ஆவது படமாக இருக்கும். இதற்கு முன்னதாக ரன், வேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.