அழகான ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் மகத் அப்பாவாக இருப்பது உற்சாகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
வல்லன் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மகத். ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதே போன்று காளை என்ற படத்திலும் நடித்தார். அதன் பின்னர் தான் தல அஜித் நடிப்பில் வந்த மங்காத்தா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்த து. இதில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பிரியாணி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்தார். ஜில்லா படத்தில் தளபதி விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார்.
வடகறி, சென்னை – 600028, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவாத்தான் வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவரது நடிப்பில் கெட்டவனு பேர் எடுத்த நல்லவண்டா, இவன் தான் உத்தமன், காதல் கண்டிஷன்ஸ் அப்ளை, சைக்கிள் என்ற தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால், அதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா, தன்னை காதலிப்பதாக கூறியதைத் தொடர்ந்து இல்லை இல்லை தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக மகத் தெரிவித்தார். அதோடு, அவரைத் தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான மகத், பிக்பாஸ் தமிழ் 3 மற்றும் பிக்பாஸ் தமிழ் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தான் காதலித்த பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். கடந்த மே 13 ஆம் தேதி தனது மனைவி பிராச்சி மிஸ்ராவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிலையில், தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நேற்று காலை அழகான ஆண் குழந்தையுடன் கடவுள் எங்களை ஆசிர்வதித்தார். இந்த அதிகப்படியான மகிழ்ச்சியுடன் நானும், பிராச்சி மிஸ்ராவும் இருக்கிறோம். உங்களது அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. அப்பாவாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram