Home Celebrities Krishna Birthday: சொந்த செலவில் கிராமத்துக்கே தடுப்பூசி கொடுத்த மகேஷ் பாபு!

Krishna Birthday: சொந்த செலவில் கிராமத்துக்கே தடுப்பூசி கொடுத்த மகேஷ் பாபு!

193
0

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது தந்தையின் 78 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சொந்த செலவில் ஒரு கிராமத்துக்கே தடுப்பூசி வழங்கியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது தந்தையும், நடிகருமான கிருஷ்ணா நேற்று தனது 78 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் என்ற கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார். அதோடு, மருத்துவனையில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தடுப்பூசிக்கான தொகையை வழங்கியுள்ளார். கிராம மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து முற்றிலும் நம்மை பாதுக்காக்கும் பொருட்டு 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here