உண்மை சம்பங்களை வைத்து உருவாகும் படங்களை வெளியிடும் வகையில் நமீதா தியேட்டர் Namita Theatre பெயரில் புதிதாக ஓடிடி தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள் மூடப்பட்டு வரும் நிலையில், திரையரங்குகளுக்கு போட்டியாக ஓடிடி தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாக ஓடிடி தளங்கள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அமேசான் பிரைம், நெட்பிளிஸ் உள்பட பல ஓடிடி தளங்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக நமீதா தியேட்டர் என்ற பெயரில் புதிதாக ஓடிடி தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஓடிடி தளத்தில் முதன்மை தூதுவராக நமீதா நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, நிர்வாக இயக்குநராக ரவி வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நடிகை நமீதா கூறுகையில், கடந்த சில வருடங்களில் ரசிகர்கள், மக்கள் என்று பலரும் எனக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தார்கள். மச்சான் நடிகையாக அறியப்பட்ட நான் ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அப்போது தான் ரவி வர்மா எனக்கு ஒரு ஐடியா கொடுத்தார். அதாவது, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படங்களை வெளியிடும் ஓடிடி தளத்தை ஆரம்பிக்கும் ஐடியாவை கொடுத்தார்.
அவர் கொடுத்த ஐடியாவின் மூலம் தற்போது நமீதா தியேட்டர் என்ற பெயரில் புதிதாக ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளோம். இதன் மூலமாக, சிறந்த படத்தை வெளியிடுவதற்கு சரியான நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த தருணத்தை என்னையும் இணைத்துக் கொண்ட ரவி வர்மாவுக்கு எனது நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஓடிடி தளத்தில் சார்ட் வீடியோ, உண்மைக் கதை போன்றவை வெளியிட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஓடிடி தளங்களில் தான் அதிக படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், நமீதா தியேட்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.