Home Celebrities வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா: தடுப்பூசி போட்டது கன்ஃபார்ம்!

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா: தடுப்பூசி போட்டது கன்ஃபார்ம்!

283
0

தான் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை என்று வெளியாகி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தடுப்பூசி போடும் போது ஊசி தெரியும்படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலையின் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணைக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதோடு, தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி காயத்ரி, சிம்ரன், அருண் விஜய், மதுரை முத்து, எம் எஸ் பாஸ்கர் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

, நம்பர் ஒன் நடிகை நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இன்று குமரன் மருத்துவமனைக்கு சென்று தங்களது முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அப்போது நிலைமை எல்லை மீறி சென்றுவிட்டது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நேற்று நயன்தாரா தடுப்பூசி போட்டு கொள்வது போன்று சைகை மட்டுமே செய்துள்ளார். உண்மையில் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். ஆனால், விக்னேஷ் சிவன் தடுப்பூசி போட்டுக் கொள்வது தெளிவாக தெரிந்த நிலையில், நயன்தாராவிற்கு தடுப்பூசி போட்ட செவிலியர் கையில் தடுப்பூசி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆதலால், நயன்தாராவிற்கு தடுப்பூசி போடப்படவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நயன்தாரா தான் தடுப்பூசி போடும் போது ஊசி தெரியும்படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here