Home Celebrities டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆச்சு, ரிசல்ட் இன்னும் வரலப்பா: பியா பாஜ்பாய்!

டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆச்சு, ரிசல்ட் இன்னும் வரலப்பா: பியா பாஜ்பாய்!

108
0

கொரோனா டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆன நிலையிலும், ரிசல்ட் இன்னும் வரவில்லை என்று நடிகை பியா பாஜ்பாய் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பொய் சொல்ல போறோம் படத்தின் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பியா பாஜ்பாய். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ, சட்டம் ஒரு இருட்டறை, கூட்டம், நெருங்கி வா முத்தமிடாதே, அபியும் அனுவும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக கடந்த வாரம் பியா பாஜ்பாயின் சகோதரர் உயிரிழந்தார். ஆனால், அவருக்கு போதுமான மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், இன்னும் ரிசல்ட் வரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த 7 ஆம் தேதி குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரையில் அது குறித்து முடிவு வரவில்லை. எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்காமல் அமைதியாக இருக்கின்றனர். கடவுளின் அருளால் எனது குடும்பம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here