Home Celebrities மகனை அறிமுகப்படுத்தி பேர் வச்சு மகிழ்ந்த ஷ்ரேயா கோஷல்!

மகனை அறிமுகப்படுத்தி பேர் வச்சு மகிழ்ந்த ஷ்ரேயா கோஷல்!

285
0

பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் இன்று தனது மகனை அறிமுகம் செய்ததோடு, அழகான பெயரும் சூட்டி மகிழந்துள்ளார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். 4ஆவது வயது முதலில் இசை மீது ஆர்வம் கொண்ட ஸ்ரேயா கோஷல், 6ஆவது வயதில் அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டார். இதையடுத்து 16ஆவது வயதில் சரிகம என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக கடந்த 2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தேவதாஸ் என்ற பாலிவுட் படத்தில் பாடல் பாடியுள்ளார். அன்று முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பாகிஸ்தானி, போஜ்பூரி, இங்கிலீஸ், நேபாளி, மராத்தி, ஒடியா, கன்னடம், குஜராத்தி, பிரெஞ்ச், பஞ்சாபி என்று பல மொழிகளில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு 10 வருட நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான ஷிலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பல பாடல்கள் பாடியுள்ளார். கடந்த மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, ஏப்ரல் மாதம் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் தேதி தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடவுளின் அருளால் இன்று பிற்பகல் விலைமதிப்பற்ற அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது போன்ற ஒரு உணர்வை இதற்கு முன்னதாக அடைந்ததில்லை. ஷிலாதித்யா, நான் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம்.

உங்களது அளவுகடந்த வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று தனது மகனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதோடு, மகனுக்கு பெயரும் சூட்டி மகிழ்ந்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: தேவ்யான் முகோபாத்யாயவை அறிமுகப்படுத்துகிறேன். மே 22 ஆம் தேதி வந்த அவன் எங்கள் வாழ்க்கையை எப்போதும் இல்லாத அளவிற்கு மாற்றியுள்ளான்.

அவன் பிறந்த போது அந்த முதல் பார்வையில் ஒரு அம்மா, அப்பா உணரும் அன்பால் எங்களது இதயத்தை நிரப்பினான். கட்டுப்பாடின்றி அதிகப்படியான அன்பு அது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here