Home Celebrities Pranitha Subhash Marriage Photo: சிம்பிளா திருமணம் செய்த சகுனி நடிகை பிரணிதா சுபாஷ்!

Pranitha Subhash Marriage Photo: சிம்பிளா திருமணம் செய்த சகுனி நடிகை பிரணிதா சுபாஷ்!

424
0

கொரோனா லாக்டவுன் என்பதால், நடிகை பிரணிதா சுபாஷ் மிகவும் எளிமையான முறையில் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வந்த உதயன் என்ற பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடித்த சகுனி மற்றும் சூர்யா நடித்த மாஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மாஸ் படத்திற்காக சிறந்த நடிகைக்கான எடிசன் விருது பெற்றார். தமிழ் மொழியைத் தவிர ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு சினிமாவில் நடித்து வரும் பிரணிதா சுபாஷ், நேற்று பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜூவை திருமணம் செய்து கொண்டார். கொரோனா லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் எளிமையான முறையில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

திருமணம் குறித்து நடிகை பிரணிதா கூறியிருப்பதாவது: கடந்த 30 ஆம் தேதி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், கடைசி வரையில் திருமண தேதி முடிவாகாமல் இருந்தது. நாங்களே எந்த முடிவும் இல்லாமல் இருந்தோம். எங்களது திருமணத்திற்கு உங்களை அழைக்காததற்கு முதலில் எங்களை மன்னித்து விடுங்கள். தயவு செய்து எங்களது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரணிதா சுபாஷ் மற்றும் நிதின் ராஜூவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pranitha Subhash (@pranitha.insta)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here