கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ரூ.1.01 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் விளைவாக, ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டது. பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலர் ஆக்சிஜன், படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். நடிகர் ஜோக்கர் துளசி, கே வி ஆனந்த், தாமிரா, சிந்துஜா, வெங்கட் சுபா, கோமகன் என்று பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகினர். கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில், கிரிக்கெட் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், தொண்டு நிறுவங்கள் என்று பல அமைப்புகள் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தற்போது தயாரிப்பாளர் ஐசர் கணேஷ் ரூ.1.05 கோடி நிதியுதவி அளித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து ரூ.1.05 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.