Home Celebrities ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிய மங்காத்தா நடிகை!

ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிய மங்காத்தா நடிகை!

221
0

மங்காத்தா பட நடிகை ராய் லட்சுமி பைக் ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கசட தபற பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தவர் ராய் லட்சுமி. இந்தப் படத்தைத் தொடர்ந்து குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சை தொடு, ரகசிய சிநேகிதனே, தாம் தூம், முத்திரை, வாமணன், நான் அவனில்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பெண் சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம், வன யுத்தம், அரண்மனை, சௌகார்பேட்டை, மொட்ட சிவா கெட்ட சிவா, நீயா 2, மிருகா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது சிண்ட்ரெல்லா 2, கேங்ச்ச்ச்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கருப்பு கலர் உடையில் ஹெல்மெட் அணியாமல் தூம் பாடலுக்கு பைக் ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here