Home Celebrities கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ரைசா வில்சன்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ரைசா வில்சன்!

155
0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன் இன்று தனது முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, ரஜினிகாந்த், ரம்யா பாண்டியன், அருண் விஜய், சிம்ரன், சூரி, எம் எஸ் பாஸ்கர், அசோக் செல்வன், கீர்த்தி சுரேஷ், பவித்ரா லட்சுமி, காயத்ரி, கௌதம் கார்த்திக், வேல்முருகன், சாந்தனு, கீர்த்தி சாந்தனு, ரித்விகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஹரிஷ் கல்யாண், விஜே அஞ்சனா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, நகுல், காளிதாஸ் ஜெயராம், அமைரா தஸ்தூர், பென்னி தயால் மற்றும் அவரது மனைவி கேத்தரின் தங்கம் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான நடிகை ரைசா வில்சன் இன்று தனது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ கேன்சர் மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here