தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்ட பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் நடிகை ரம்யா பாண்டியன், அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கோட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலையின் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணைக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதோடு, தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி காயத்ரி, சிம்ரன், அருண் விஜய், மதுரை முத்து, எம் எஸ் பாஸ்கர் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
பின்னணி பாடகர் வேல்முருகனும் நேற்று உயிர் காக்கும் கேடயமே தடுப்பூசி என்ற பாடலை பாடி தடுப்பூசி போட்டு கொண்டார். இதையடுத்து, நகைச்சுவை நடிகர் சூரியும், அவரது மனைவியுடன் சேர்ந்து நேற்று கொரோனா முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ் நேற்று தனது முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடையது கிடைத்துவிட்டது. உங்களுடையது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கும் இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று நானே தடுப்பூசி போட்டுக்கிட்டேன். நம்மையும், மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது நமது கடமை. எனது சந்தேகங்களையும், அச்சத்தையும் நீக்கியதற்காக பெருங்குடியில் உள்ள அப்போலோ மருத்துவமனை மருத்துவ ஊழியர்களுக்கும், மருத்துவர்களான கார்த்திகா, ஃபைசல், ரவி மற்றும் பரிமளா ஆகியோருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் பிக்பாஸ் 4 ஆகியவற்றின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளார். இதையடுத்து, அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படியும், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
First dose done ..please get vaccinated …lets stay home and stay safe pic.twitter.com/lFvvOSyOKU
— Ramya Pandian (@iamramyapandian) May 21, 2021