சுல்தான் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழகத்தின் மருமகளாக வேண்டும் என்பது தனது ஆசை என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் கொடகு மாவட்ட த்தில் உள்ள கூர்க் பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி பிறந்தவர் தான் எக்பிரஷன் குயீன் நடிகை ராஷ்மிகா மந்தனா. கொடவா பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர். சைக்காலஜி பிரிவில் பட்டம் பெற்ற ராஷ்மிகா மந்தனா, எம் எஸ் ராமையா கல்லூரியில் பத்திரிக்கை மற்றும் ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். அதன் பிறகு மாடலிங்கும் படித்து ஒரு சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.
இவரது அழகான வெளிப்பாட்டின் காரணமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அப்படி நடித்த முதல் படம் தான் கிரிக் பார்ட்டி. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு சலோ என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இவரது நடிப்பில் வந்த கீதா கோவிந்தம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கவே சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதே போன்று டியர் காம்ரேட் படமும் ஹிட் கொடுக்கவே சினிமாவில் உச்சம் தொட்டார். சரிலேரு நீகேவ்வரு என்ற படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது. தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார்.
தற்போது தமிழ் சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். கார்த்தி நடிப்பில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியான சுல்தான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளார். எளிமையான கிராமத்து கதாபாத்திரத்தின் மூலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். அடுத்த தாக பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார். ஆம், மிஷன் மஞ்சு என்ற பட த்தின் மூலமாக ஹிந்தியிலும் அறிமுகமாகியுள்ளார். குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் காலூன்றிய நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
சுல்தான் படத்தின் மூலமாக தமிழகத்தில் பல நாட்கள் இருந்த நிலையில், தமிழ் கலாச்சாரமும், அதன் பாரம்பரியமும், உணவும் மிகவும் பிடித்துள்ளது. சமீபத்தில் திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, இன்றைக்கு இல்லையென்றாலும் என்றைக்காவது ஒருநாள் தமிழ் குடும்பத்தின் மருமகளாக வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள தனக்கு ஆசை இருப்பதாக கூறியுள்ளார். தற்போது புஷ்பா, குட்பை, Aadavaallu Meeku Johaarlu ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் பெங்களூர் அணிக்கு ஆதரவு தெரிவித்த ராஷ்மிகா மந்தனா தனக்கு எம் எஸ் தோனியைத் தான் அதிகளவில் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.