Home Celebrities Vishal31:லாக்டவுன் முடியும் வரை காத்திருக்க முடியாது: ரவீனா ரவி!

Vishal31:லாக்டவுன் முடியும் வரை காத்திருக்க முடியாது: ரவீனா ரவி!

286
0

விஷால் நடிப்பில் உருவாகி வரும் விஷால்31 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு லாக்டவுன் முடியும் வரை தன்னால் காத்திருக்க முடியாது என்று நடிகை ரவீனா ரவி தெரிவித்துள்ளார்.

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் எனிமி. இந்தப் பட த்தைத் தொடர்ந்து விஷால்31 பட த்தில் நடிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் விஷால்31 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் து.ப. சரவணன் இயக்குகிறார். இவர், விஷால்31 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். குள்ளநரி கூட்டம் மற்றும் தேன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஹீரோ, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களை எதிர்த்து போராடும் கதையே மையப்படுத்தி விஷால்31 படம் உருவாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயட்டி நடிக்கிறார். டப்பிங் நடிகை ஒருவரும் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சாட்டை படத்தில் மகிமா நம்பியாருக்கு டப்பிங் கொடுத்த ரவீனா ரவி இந்தப் படத்தில் நடிக்கிறார்.  இவர், ஒரு கிடாயின் கருணை மனு, காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்தப் படங்களின் மூலமாக தற்போது விஷால்31 படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது நாட்டையே உலுக்கி வரும் கொரோனா காரணமாக நாடு முழுவதும் வரும் 24 ஆம் தேதி வரையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாஸ் ஹீரோக்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், விஷால்31 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரவீனா ரவி, லாக்டவுன் முடியும் வரை தன்னால் காத்திருக்க முடியாது என்று டுவிட்டரில் விஷால் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: லாக்டவுனுக்குப் பிறகு செட்டுக்கு திரும்பு வரை காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வரும் ஆகஷ்ட் மாதம் விஷால்31 படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதம் என்றால், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here