சிம்புவின் ஒஸ்தி பட நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் தனது ஆண் குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். இந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு இந்திய சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, எம்பிஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அதன் பிறகு தனது நீண்ட நாள் நெருங்கிய நண்பரான ஜோ லாஞ்செல்லா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த ரிச்சா கங்கோபாத்யாயிக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு லூகா ஷான் லாஞ்செல்லா என்றும் பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில், தற்போது குழந்தையின் முகத்தை வெளியுலகிற்கு காட்டியுள்ளார். குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram