Home Celebrities Vaccination: மனைவியுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சாந்தனு!

Vaccination: மனைவியுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சாந்தனு!

160
0

தனது மனைவி கீர்த்தியுடன் இணைந்து நடிகர் சாந்தனு இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா முதல் அலையைவிட 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. என்னதான் மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகரித்து வருகிறது. இனி வரும் வாரங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொடும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதோடு, தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த், அருண் விஜய், சிம்ரன், காயத்ரி, கல்யாணி பிரியதர்ஷன், வேல்முருகன், கௌதம் கார்த்திக், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா பாண்டியன், திவ்யதர்ஷினி என்ற டிடி, ராதிகா ஆப்தே, விஜே அஞ்சனா, ஹரிஷ் கல்யாண், கீர்த்தி சுரேஷ், அசோக் செல்வன் என்று பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி ஆகியோர் இன்று தங்களது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். ஆம், சென்னையில் உள்ள எம் ஜி எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து சாந்தனு கூறியிருப்பதாவது: உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை உங்களுக்கு பாதுகாப்பு இல்லை! எனவே உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்ளுங்கள். பொறுப்பை நோக்கி ஒரு படி! என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், தனது அப்பா பாக்யராஜ் மற்றும் அம்மா பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Kiki Vijay (@kikivijay11)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here