காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் இன்று தனது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, ரஜினிகாந்த், ரம்யா பாண்டியன், அருண் விஜய், சிம்ரன், சூரி, எம் எஸ் பாஸ்கர், அசோக் செல்வன், கீர்த்தி சுரேஷ், பவித்ரா லட்சுமி, காயத்ரி, கௌதம் கார்த்திக், வேல்முருகன், சாந்தனு, கீர்த்தி சாந்தனு, ரித்விகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஹரிஷ் கல்யாண், விஜே அஞ்சனா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, நகுல், காளிதாஸ் ஜெயராம், அமைரா தஸ்தூர், பென்னி தயால் மற்றும் அவரது மனைவி கேத்தரின் தங்கம் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகை சோனியா அகர்வால் இன்று தனது தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்னுடைய முதல் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் பட த்தைத் தொடர்ந்து சக்சஸ், கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, ஒருநாள் ஒரு கனவு, திருட்டு பயலே, புதுப்பேட்டை, வானம், சதுரங்கம், ஒரு நடிகையின் வாக்குமூலம், பாலக்காட்டு மாதன், தடம், தனிமை, அயோக்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பாகீரா, காதலை தேடி நித்யா நந்தா, ஷ்ஷ்ஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Took my first shot #CovidVaccine #Covishield #staysafe pic.twitter.com/YogaBREkAz
— Sonia aggarwal (@soniya_agg) June 1, 2021

