Home Celebrities சன் டிவி ரூ.30 கோடி கொரோனா நிவாரண நிதி!

சன் டிவி ரூ.30 கோடி கொரோனா நிவாரண நிதி!

118
0

கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி நிறுவனம் ரூ.30 கோடி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கையும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகர் கோமகன், பாண்டு, டிகேஎஸ் நடராஜன், நடிகர் கல்தூண் திலக் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகினர். இன்று பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். மேலும், ஆண்ட்ரியா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், அம்மு அபிராமி, நந்திதா ஸ்வேதா ஆகியோர் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கிரிக்கெட் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், தொண்டு நிறுவங்கள் என்று பல அமைப்புகள் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், சன் டிவி நிறுவனமும் தங்களது பங்கிற்கு ரூ.30 கோடி வரையில் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு கொரோனா தடுப்பு திட்டங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகள் வழங்குவதன் மூலம் தொண்டு நிறுவனங்களுடன் சன் டிவி நிறுவனம் இணைந்து செயல்படும்.

கூடுதலாக, இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சன் டிவி நிறுவனம் செயல்படும் என்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here