படுக்கைக்கு அழைத்தவரை சுட்டிக்காட்டி ஸ்கிரீன் ஷாட் எடுத்த வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா துறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கும் இருந்து வருகிறது. இது குறித்து பல நடிகைகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மற்றொரு நடிகையும் இது குறித்து தகவலை வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சௌந்தயார். இவர், ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சௌந்தர்யா தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கான ஆதாரத்தையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், அந்த நபரை பிளாக் செய்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், அவர் ஆணா? பெண்ணா? என்று குறிப்பிடவில்லை. அவரது ஐடி சுஜா8865 என்று காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சௌந்தர்யா இப்படி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.