வரும் ஜூன் மாதம் தொடங்கும் ஷாங்காய் திரைப்பட விழாவின் சூர்யாவின் சூரரைப் போற்று படம் திரையிடப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சூர ரைப் போற்று படம் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், பரேஷ் ராவல், காளி வெங்கட், விவேக் பிரசன்னா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துர பட்டியலில் இடம் பெற்றிருந்த சூரரைப் போற்று படம் தற்போது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.
வரும் ஜூன் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா நடக்க இருக்கிறது. அதுவும், இந்த இக்கட்டான சூழலில் விழா நடக்க இருப்பதால், நோய் தடுப்பு கட்டுப்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை பின்பற்றியே இந்த விழா நடக்க இருக்கிறது. இந்த விழாவில் தான் சூர்யாவின் சூரரைப் போற்று படம் திரையிடப்பட இருக்கிறது.