சூர்யா தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 250 ரசிகர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
நாட்டையே உலுக்கிய கொரோனா முதல் அலையை விட கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா 2ஆவது அலையின் காரணமாக அப்பாவி ஜனங்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகம். கொரோனாவால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி தவித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு, சினிமா பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று பலரும் உதவி செய்து வருகின்றனர்.
கொரோனா லாக்டவுன் காரணமாக ஏற்கனவே சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் சூர்யா ரகசியமாக சத்தமேயில்லாமல் வருமானம் இல்லாமல் தவிக்கும் தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ரசிகர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5000 வீதம் பணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை நேற்று மட்டும் 250 ரசிகர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து முதல் முறையாக சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் ரூ.1 கோடி வரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Proud to be Your fan #Suriya Anna ❤️ https://t.co/ClvFyhYs9v
— கிரிஷ் ˢᵘʳⁱʸᵃ⁴⁰ ️ (@GokulVK18_SFC) June 9, 2021