Home Celebrities November Story: அனுராதாவாக தமன்னா: த்ரில்லர் கதையில் நவம்பர் ஸ்டோரி!

November Story: அனுராதாவாக தமன்னா: த்ரில்லர் கதையில் நவம்பர் ஸ்டோரி!

254
0

முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் மூலமாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

கேடி என்ற பட த்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தவர் நடிகை தமன்னா. அதன் பிறகு, வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், பையா, சுறா, சிறுத்தை, வீரம், பாகுபலி, தோழா, தேவி, பாகுபலி 2, ஸ்கெட்ச், பெட்ரோமாக்ஸ் என்று பல படங்களில் நடித்துள்ளார். தமன்னா நடிப்பில் கடைசியாக தமிழ் படம் ஆக்‌ஷன்.

தமிழ் மொழியைத் தவிர, தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சமந்தா, பூர்ணா, காஜல் அகர்வால் என்று மாஸ் ஹீரோயின்கள் வெப் சீரிஸில் நடித்து வரும் நிலையில் நடிகை தமன்னாவும் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளார். அதன்படி, இயக்குநர் இந்திரா சுப்பிரமணியன் இயக்கத்தில் அனுராதா கதாபாத்திரத்தில் மென்பொருள் நிபுணராக தமன்னா நடித்த வெப் சீரிஸ் நவம்பர் ஸ்டோரி. 7 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ் இன்று விஐபி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு எபிசோடும் த்ரில்லராகவும், அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. அனுராதாவின் அப்பா கணேசன். இவர், அல்செய்மரால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை குணப்படுத்துவதற்கு பணம் தேவை என்ற நிலையில், அப்பாவின் பெயரில் உள்ள வீட்டை விற்க முயற்சிக்கிறார்.

அந்த வீட்டில், ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. அந்த சடலத்திற்கு அருகில் கணேசன். ஒரு கட்ட த்தில் கணேசன் தான் கொலையாளி என்று போலீசார் சந்தேகிக்கும் நிலையில், அப்பா அந்த கொலையை செய்யவில்லை என்று கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் அனுராதா.

நான்கு பக்கமும் அலசி ஆராய்ந்தால் கடைசியில், அனுராதாவின் சகோதரி நமீதா கிருஷ்ணமூர்த்தியின் மனநிலை பாதிக்கப்படச் செய்து அவரை கடைசி வரைக்கும் தனது கூடவே வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படும் டாக்டர் குழந்தை ஏசு பசுபதி தான் அந்த கொலையாளி என்று தெரியவருகிறது. அதன் பிறகு அவரை கொன்று சகோதரி நமீதா கிருஷ்ணமூர்த்தியை காப்பாற்றுகிறார்.

இதற்காக அனுராதாவாக வந்த தமன்னா எடுத்துக் கொண்ட முயற்சிகள் பிரமிக்க வைக்கிறது. ஒரு ஆக்‌ஷன் படம் பார்த்தது போன்று தோன்றுகிறது. நவம்பர் ஸ்டோரியில் தமன்னாவுடன் இணைந்து ஜி எம் குமார், விவேக் பிரசன்னா, அருள்தாஸ், மைனா நந்தினி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

எபிசோடு 1: Save Him From Him

எபிசோடு 2: White Wash

எபிசோடு 3: Flashes

எபிசோடு 4: Crossroads

எபிசோடு 5: Knitting

எபிசோடு 6: Close To

எபிசோடு 7: Truth

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here