Home Celebrities ரீல் அப்டேட் இல்ல, ரியல் அப்டேட் கொடுத்த அஜித்!

ரீல் அப்டேட் இல்ல, ரியல் அப்டேட் கொடுத்த அஜித்!

275
0

வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தொல்லை கொடுத்த ரசிகர்களுக்கு, ரீல் வேண்டாம் ரியல் அப்டேட் தரேன் எனத் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் அஜித்.

நடிகர் அஜித் சில மாதங்களாகவே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டது அனைவரும் அறிந்ததே! ஏதே படத்தில் நடிக்க ட்ரைனிங் எடுப்பதாகத்தான் முதலில் அனைவரும் நினைத்தனர்.

ஆனால், துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வதற்காகத்தான் அஜித் பயிற்சி எடுக்கிறார் எனப் பிறகுதான் தெரியவந்தது.

இந்நிலையில், தமிழக அளவில் 46-வது துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட அஜித், தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என முதலமைச்சர் முதல் பிரதமர் வரை கேட்டுக்கேட்டு அழுத்துப்போன ரசிகர்களுக்கு தங்கப்பதக்கம் வென்று ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் அஜித்.

அஜித் துப்பாக்கி சுடுவது மட்டும் அல்ல கார் ரேஸ், பைக் ரேஸ் போன்ற விளையாட்டுக்களிலும் கலந்துகொண்டவர். கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக சில வருடம் சினிமாவில் கூட நடிக்காமல் இருந்தார் என்றால் பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here