Home Celebrities மருத்துவர்களின் சேவையை பாராட்டி தங்க நாணயம் பரிசு: விஜய் மக்கள் இயக்கம் உறுப்பினர்கள்!

மருத்துவர்களின் சேவையை பாராட்டி தங்க நாணயம் பரிசு: விஜய் மக்கள் இயக்கம் உறுப்பினர்கள்!

234
0

மருத்துவர்கள், செவிலியர்கள், டிரைவர்கள், லேப் டெக்னீசியன்கள் என்று பலருக்கும் விஜய் ரசிகர்கள் தங்க நாணயங்களை பரிசாக வழங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ வல்லுநர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தளர்வுகளின்றி வரும் 31 ஆம் தேதி வரையில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்ட து. தற்போது அது மேலும், ஒரு வாரம் வரையில் அதாவது ஜூன் முதல் வாரம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா இக்கட்டான சூழ்நிலையில், ஒவ்வொருவருக்கும் கடவுளாக காட்சி தருவது மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தான்.

கொரோனாவால் எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தங்களது உயிர்களையும் பெரிதாக மதிக்காமல், குணப்படுத்தி வரும் மருத்துவர்கள் தான் கடவுள். ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் தங்களது கடமையை செய்து வருகின்றனர். இரவு பகல் என்று கூட பார்க்காமல் ஓய்வின்றி உழைக்கின்றனர். சில மருத்துவர்கள் கொரோனாவுக்கு கூட பலியாகியிருக்கின்றனர்.

இந்த நிலையில், மக்களை காக்க போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆல்புலன்ஸ் டிரைவர்கள், சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியர்கள் என்று பலரையும் பாராட்டி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தளபதி விஜய் மக்கள் உறுப்பினர்கள் தங்க நாணயங்களை பரிசாக வழங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here