சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான்60 படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான்60 படத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆக்ஷன் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வந்த சியான்60 படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட த்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. கொரோனா லாக்டவுன் முற்றிலும் முடிந்த பிறகு சியான்60 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் விக்ரமிற்கு வில்லனாக விக்ரம் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் முதல் பார்ட் முழுவதும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுவதாகவும், 2ஆம் பார்ட் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிப்பதாக தற்போது புதிதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First half full of love portions and second of full of action portions.#VaniBhojan to act as a pair for #DhruvVikram.
— K RTHIK DP ❁ (@dp_karthik) June 8, 2021