Home Celebrities ஆர்பி சௌத்ரி மீது விஷால் போலீசில் புகார்!

ஆர்பி சௌத்ரி மீது விஷால் போலீசில் புகார்!

190
0

தயாரிப்பாளரான ஆர் பி சௌத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். புது வசந்தம், ஆனந்தம், ராஜா, சேரன் பாண்டியன், நாட்டாமை, சூர்யவம்சம், துள்ளாத மனமும் துள்ளும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்று ஏராளமான படங்களை சூப்பர் குட் பிலிம்ஸ் மூலமாக ஆர் பி சௌத்ரி தயாரித்துள்ளார்.

படங்கள் தயாரிப்பதோடு, பல படங்களுக்கு பைனான்ஸூம் செய்து வருகிறார். அந்த வகையில், விஷால், இவரிடம் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை கடந்த பிப்ரவரி மாதம் அடைத்துள்ளார். கடனுக்காக விஷால் தரப்பில் கையெழுத்திட்டு கொடுக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்களை திரும்ப ஒப்படைக்கவில்லை.

இது குறித்து கேட்ட போதும் தொலைந்து விட்டதாக பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக விஷால் தரப்பினர், காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here