Home Celebrities யாதும் ஊரே யாவரும் கேளிர்: இயக்குனருக்கே தெரியாமல் வெளியான டீசர்!

யாதும் ஊரே யாவரும் கேளிர்: இயக்குனருக்கே தெரியாமல் வெளியான டீசர்!

255
0

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் வெளியானது எனக்கே தெரியாது என படத்தின் இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் எஸ்.இசக்கிதுரை இப்படத்தை தயாரித்துள்ளார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் மார்ச் 4-ம் தேதி வெளியானது. இந்த டீசர் வெளியானது எனக்கே தெரியாது நான் 45 நிமிடங்கள் கழித்தே டீசரை பார்த்தேன்.

இந்த டீசருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.  உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்டக்கூடிய, நான் கட் செய்த டீசர் என்னிடம் இருக்கிறது.

டப்பிங், RR, DI பணிகள் முடியாமல் அப்படியே ராவாக உள்ளது. தயாரிப்பு தரப்போடு இந்த குளறுபடிக்கு அடிப்படைக் காரணம் பற்றி கேட்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

வெங்கட கிருஷ்ணாவிற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் முதல் படம். அறிமுக படத்திலேயே தயாரிப்பு தரப்போடு மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் யார் பக்கம் தவறு உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here