சூர்யா40 படப்பூஜை சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொள்ளாத நடிகர் சூர்யா நேரடியாக படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தற்பொழுது படத்தின் வில்லன் வினய் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 40-வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகின்றார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. டாக்டர் படத்தில் நடித்த “பிரியங்கா அருள் மோகன்” நாயகியாக நடிக்கின்றார்.
தற்பொழுது மேலும் ஒரு நடிகர், டாக்டர் படத்தில் இருந்து சூர்யா40 படத்திற்கு நடிக்க வந்துள்ளார். நடிகர் வினய், சூர்யா40 படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
“உன்னாலே உன்னாலே” படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான வினய் துப்பறிவாளன் படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்தார். வில்லன் கதாப்பாத்திரத்தின் மூலம் பலரது பாராட்டுகளைப்பெற்றார்.
அதன்பிறகு, சிவக்கார்த்திகேயன் நடித்து திரைக்கு வரவுள்ள “டாக்டர்” படத்திலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சூர்யா40 படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார்.
நடிகர் வினய், கோலிவுட்டில் சக்சஸ்புல் வில்லனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.