நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜே அஞ்சனா இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா முதல் அலையைவிட 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. என்னதான் மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகரித்து வருகிறது. இனி வரும் வாரங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொடும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதோடு, தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
ரஜினிகாந்த், அருண் விஜய், சிம்ரன், காயத்ரி, கல்யாணி பிரியதர்ஷன், வேல்முருகன், கௌதம் கார்த்திக், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா பாண்டியன், திவ்யதர்ஷினி என்ற டிடி, ராதிகா ஆப்தே என்று பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், விஜே அஞ்சனா இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 என்ற டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். ப்ரியா விடு, வாழ்த்துக்கள், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.