Home celebrities விஜய்க்கு வில்லனாகும் இயக்குநர் செல்வராகவன்? பிளான் போடும் இயக்குநர்!

விஜய்க்கு வில்லனாகும் இயக்குநர் செல்வராகவன்? பிளான் போடும் இயக்குநர்!

295
0

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி65 படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இயக்குநர் செல்வராகவனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் தளபதி65. தற்காலிகமாக தளபதி65 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

மேலும், யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பேன் இந்தியா படமாக தளபதி65 படம் உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு விஜய், ஜார்ஜியாவில் நடந்த தளபதி65 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள அங்கு சென்றார். அதன் பிறகு ஒரு மாதம் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்பினார்.

ஆனால், 2ஆவது கட்ட படப்பிடிப்பு கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில், 2ஆவது கட்ட படப்பிடிப்பு நட த்த செட் வேலைகள் நடந்துள்ளது. ஆனால், அதனை நிறுத்தும்படி படக்குழுவினருக்கு விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மீண்டும் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக இயக்குநர் செல்வராகவன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக சியான் விக்ரம், அருண் விஜய், வித்யுத் ஜம்வால், ஜாக்கி ஷெராஃப், நவாசுதீன் சித்திக் ஆகியோரது பெயர் விஜய்க்கு வில்லனாக நடிப்பவர்களின் பட்டியலில் இடம் பெற்றது. தற்போது செல்வராகவன் பெயர் இடம்பெற்றுள்ளது. எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபுவின் அம்மா காலமானார்!
Next articleகொரோனாவுக்கு பலியான மற்றொரு தமிழ் நடிகர் ஜோக்கர் துளசி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here