Home celebrities வீட்டு தோட்டக்காரனாக அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்!

வீட்டு தோட்டக்காரனாக அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்!

884
0

வீட்டு காய்கறி தோட்டத்தை தனது மகளுடன் சேர்ந்து பார்வையிட்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சிவகார்த்திகேயன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போலீஸ்கா ருக்கு மகனாக பிறந்து சின்னத்திரையின் மூலமாக தனது திறமைகளை வெளிக்கொண்டு வந்து தற்போது மாஸ் ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகராக மட்டும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பல திறமைகளைக் கொண்டுள்ளார். தற்போது அடுத்த கட்டத்துக்கும் சென்றுள்ளார். ஆம், வீட்டு தோட்டக்காரனாகவும் மாறியுள்ளார்.

வீட்டில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டம், கீரை வகைகளை தனது மகளுடன் இணைந்து பார்வையிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: லாக்டவுனுக்கு முன்பு இந்த தோட்டத்தை வெச்சு இருந்தோம், காய்கறிகள் கீரை வகைகளை பயிரிட்டு, இன்னும் இங்கே முழுவதும் ரெடி பண்ணனும் ஆசை. தோட்டம் முழுமை பெற்றதும் மீண்டும் முழுவதையும் காட்டுறன் என்று கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் விவசாயம் செய்கிறார். நடிகர் கிஷோரும் விவசாயியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleKamal Haasan: கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் தேசிய விருது ஸ்டண்ட் மாஸ்டர்கள்!
Next articleவிஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here