Home celebrities Sivakarthikeyan: ஓடிடிக்கு வாய்ப்பு: டாக்டருக்கு யுஏ சர்டிபிகேட்! ரன்னிங் டைம் எவ்ளோ தெரியுமா?

Sivakarthikeyan: ஓடிடிக்கு வாய்ப்பு: டாக்டருக்கு யுஏ சர்டிபிகேட்! ரன்னிங் டைம் எவ்ளோ தெரியுமா?

457
0

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள டாக்டர் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வந்து மாஸ் ஹீரோவுக்கு இணையாக வளர்ந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் வருண் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தமிழகத்தில் நடக்க இருந்த சட்டமன்ற தேர்தல் காரணமாக டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நாட்டையே உலுக்கி வரும் கொரோனாவின் 2ஆவது அலை காரணமாக இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு போதுமான அளவு படுக்கை வசதியும் கிடைக்கவில்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து மக்களும் போராடி வரும் இந்த இக்கட்டான சூழலில் சினிமா பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட இந்த இக்கட்டான சூழ்நிலையில், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் தொடர்ந்து டாக்டர் படம் எப்போது வெளிவரும் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால், எனது சுற்றங்களையும், நண்பர்களையும் கொரோனாவால் இழந்து கொண்டிருக்கிறேன். இது போன்ற ஒரு இக்கட்டான சூழலில் டாக்டர் ரிலீஸ் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வீட்டில் பாதுகாப்பாக இருந்து உங்களையும், உங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தணிக்கைக்கு சென்ற இந்தப் பட த்திற்கு தணிக்கைக் குழு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. முதல் முறையாக சிவகார்த்திகேயன் படம் யு சான்றிதழை தவறவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக வந்த அனைத்து படங்களுக்கும் யு சான்றிதழே கிடைத்துள்ளது. அதோடு, டாக்டர் படம் 148.12 நிமிடம் வரையில் ஓடக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையிலும், கொரோனா தாக்குதல் காரணமாகவும் டாக்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Previous articleTrisha: ஆடுகளம் படத்தில் த்ரிஷா: வைரலாகும் ஷூட்டிங் புகைப்படங்கள்!
Next articleM Kalai Selvan: தாதா87 பட தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here