Home celebrities Vignesh Shivan Vaccine: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட காதல் ஜோடி: வைரலாகும் புகைப்படம்!

Vignesh Shivan Vaccine: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட காதல் ஜோடி: வைரலாகும் புகைப்படம்!

426
0

நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். அதோடு, நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலையின் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணைக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதோடு, தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி காயத்ரி, சிம்ரன், அருண் விஜய், மதுரை முத்து, எம் எஸ் பாஸ்கர் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், நம்பர் ஒன் நடிகை நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இன்று குமரன் மருத்துவமனைக்கு சென்று தங்களது முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அப்போது நிலைமை எல்லை மீறி சென்றுவிட்டது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நானும் ரௌடி தான் படத்தின் மூலமாக இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், விரைவில் திருமணமும் செய்து கொள்ள இருக்கின்றனர். ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு நயன் தாராவும், விக்னேஷ் சிவனும் சுற்றுலா சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அண்மையில் இருவரும் தனி விமானம் மூலமாக கேரளா சென்று வந்தனர்.

தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன் தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleCorona Relief Fund: முதல் முறையாக ஒரு நடிகை: நிதி அகர்வால் ரூ.1 லட்சம் நிதியுதவி!
Next articleVignesh Shivan: நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லையா? விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here