குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான கனி இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் கனி. இந்நிகழ்ச்சில் அதிக முறை காரக்கொழம்பு சமையல் செய்து காரக்கொழம்பு கனி என்றே அழைக்கப்பட்டார். அஸ்வின், மதுரை முத்து, சகீலா, தீபா, தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி ஆகியோருக்கு கடும் போட்டியாளராக திகழ்ந்த கனி கடைசியாக டைட்டில் வின்னராகவும் வந்தார். அவருக்கு ரூ.5 லட்சத்திற்கான பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அதோடு, ஒண்டர் உமன் என்ற விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று கனி தனது முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா முதல் அலையைவிட 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. என்னதான் மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகரித்து வருகிறது. இனி வரும் வாரங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொடும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதோடு, தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
ரஜினிகாந்த், சூரி, அருண் விஜய், எம் எஸ் பாஸ்கர், சிம்ரன், காயத்ரி, பவித்ரா லட்சுமி, திவ்யதர்ஷினி, கல்யாணி பிரியதர்ஷன், ராதிகா ஆப்தே, வேல்முருகன் என்று சினிமா பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், தற்போது குக் வித் கோமாளி 2 பிரபலம் கனியும் இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாது: இது முழுவதும் பாதுகாப்பானது. தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram