கொரோனா உறுதி செய்யபட்ட போது மரண பீதியில் இருந்தேன் என்று கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் சம்யுக்தா ஹெக்டேயின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தைத் தொடர்ந்து, சமீபத்தில், சம்யுக்தா ஹெக்டேவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சம்யுக்தா ஹெக்டே கூறியிருப்பதாவது: இப்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. எனினும், டேஸ்ட், ஸ்மெல் ஆகியவற்றை இழந்துள்ளேன். உடல் சோர்வாக இருக்கிறது. என்னை நேசிப்பவர்களை நான் இழந்துவிடுவேனோ என்ற பயம் வந்தது. ஆனால், கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மரண பயம் ஏற்பட்டது.
எனது பெற்றோரும் கொரோனா பாதிப்பில் இருந்தனர். என்னதான் சொகுசு வாழ்க்கையும், ரசிகர்கள் இருந்தாலும் கொரோனா விஷயத்தில் உதவியற்றவர்களாகவே உணர்ந்தோம். எனது அம்மாவை கட்டித்தழுவ முடியவில்லை. ஆரோக்கியத்தில் யாரும் கவனம் செலுத்துவதும் இல்லை. உடற்பயிற்சி செய்வதும் இல்லை. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள தவறுகிறோம். நல்ல உணவு பழக்க வழக்கம் இருந்தால் தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.
நம்மில் பலர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இல்லை. உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு பழக்கம் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்’’ என்று கூறியுள்ளார்.
View this post on Instagram