Home celebrities Ajith Home Bomb Threat: தல அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

Ajith Home Bomb Threat: தல அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

426
0

தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அஜித். இவரது தெரியாத கலை எதுவும் இல்லை என்று கூட கூறலாம். போட்டோகிராஃபர், பைக் ரேஸர், கார் ரேஸர், துப்பாக்கி சுடுதல் சாம்பியன், வானூர்தி ஓட்டுவதற்கு லைசென்ஸ், சமையல் கலை வித்தகர், டிரோன் வடிவமைப்பாளர், ஆலோசகர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார். சினிமாவில் நடிப்பதோடு சரி, வேறெங்கும் அஜித்தை காண முடியாது.

இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை ஆகிய படத்தைத் தொடர்ந்து தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 10 சதவிகித காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதுவும் பைக் ஸ்டண்ட் காட்சிகள். ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட இருக்கிறது.

போலீஸ் மற்றும் குடும்ப கதையை மையப்படுத்தி உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் இணைந்து ஹூமா குரேஸி, கார்த்திகேயா கும்மகோண்டா, ஷிவாஜி குருவாயூர், பவல் நவகீதன், யோகி பாபு, சுமித்ரா, அஜ்யுத் குமார், புகழ், சங்கீதா, ராஜ் அய்யப்பா ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பிரபங்களின் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. தீவிர விசாரணையில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வதோடு, சில நேரங்களில் எச்சரித்தும் அனுப்பி விடுகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, அஜித் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக எச்சரித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அஜித் வசிக்கும் திருவான்மியூர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள கிழக்கு கடற்கரை காவல் நிலையம் ஆகிய இடங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று அஜித் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் நம்பரை டிராக் செய்து பார்த்து போது அது மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் என்று தெரியவந்தது.

புவனேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர். இதற்கு முன்னதாக அவர் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் முதல்வரான பழனிசாமி ஆகியோரது வீடுகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleJanani Twitter: சாதியை தூக்கி எறிந்த ஜனனி: குவியும் பாராட்டுக்கள்!
Next articleமருத்துவர்களின் சேவையை பாராட்டி தங்க நாணயம் பரிசு: விஜய் மக்கள் இயக்கம் உறுப்பினர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here