Home celebrities A R Murugadoss Video: நாகேஷ் படத்தில் சர்வர் வேலை பார்த்த இயக்குநர் ஏஆர் முருகதாஸ்:...

A R Murugadoss Video: நாகேஷ் படத்தில் சர்வர் வேலை பார்த்த இயக்குநர் ஏஆர் முருகதாஸ்: வைரலாகும் வீடியோ!

349
0

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் நகைச்சுவை நடிகர் நாகேஷ் நடித்த படத்தில் சர்வர் வேலை பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோடான கோடி சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் நாகேஷ். நடிகர், வில்லன், குணச்சித்திர வேடம், காமெடி என்று ஏராளமான கதாபாத்திரங்களின் வாயிலாக தனது நடிப்புத் திறமையை வெளிகாட்டியவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் 1000க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இப்படி, நாகேஷ் நடித்த படங்களில் ஒன்று தான் பூச்சூடவா. இயக்குநர் உதயசங்கர் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் பூச்சூடவா. இந்தப் பட த்தில் நாகேஷ், சிம்ரன், அப்பாஸ், கவிதா, மணிவண்ணன், பிசி ராமகிருஷ்ணா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் ஏ.ஆர்.முருகதாஸூம் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் சினிமாவில் நடித்த முதல் படம் இது. அதுவும், சர்வராக நடித்திருக்கிறார்.

சர்வர் உடையில் பிளாஸ்க்கில் டீ கொண்டு வந்து டீ கப்பில் ஊற்றும் போது கண்ணா சர்க்கரை கம்மியாத்தான இருக்கு. கண்ணா லாண்டரிக்கு போட்ட துணி இன்னும் வரலையே என்னாச்சு என்று நாகேஷ் கேட்கிறார். அதற்கு ஹவுஸ் கீப்பிங்கில் கேட்கிறேன் என்கிறார் ஏ ஆர் முருகதாஸ். அதன் பிறகு உனது பெயர் என்று கேட்கவே எனது பெயர் முருகதாஸ் என்கிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். அந்த வீடியோவை இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஸ்டோர் ரூம் மெமோரிஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பட த்திற்கு ஏ ஆர் முருகதாஸ் தான் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ARMurugadoss (@a.r.murugadoss)

Previous articleDhanush: இதோ வந்துருச்சுல அடுத்த அப்டேட்: ஜகமே தந்திரம் இசை வெளியீடு தேதி அறிவிப்பு!
Next articleகுழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு பட நடிகை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here