குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் ஷிவாங்கியின் மூலமாக பிரபலமான அஸ்வின் தொலைக்காட்சியில் அதிகம் விரும்பப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தின் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஸ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன். ஆனால் என்ன சிறப்பு தோற்றம் தான். இதே போன்று நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் வரும் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து சென்றார். மூன்றாவது படமான ஓகே கண்மணி பட த்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து வேலை பார்க்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின், எனை நோக்கி பாயும் தோட்டா, ஜூலை காற்றில், ஆதித்யா வர்மா, இந்த நிலை மாறும் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவைத் தவிர விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆபிஸ் என்ற சீரியலில் நடித்துள்ளார். ஆபிஸ் சீரியலில் 2ஆவது சீசனில் பவித்ரா ஜனனி உடன் இணைந்து நடித்துள்ளார். அதன் பின், ரெட்டை வால் குருவி, ராஜா ராணி, நினைக்க தெரிந்த மனமே என்று பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சினிமா, சீரியல் தவிர 3 சந்திப்புகள், புல்லட் 350 சிசி, பிரதி, இடர், 3 சீன்ஸ் ஆப் லவ் ஸ்டோரி, பிளிங்க், சிண்ட்ரெல்லா, காதல் ஒன்று கண்டேன் என்று வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், குளோனிங் காதல், ரிதம் ஆஃப் லைஃப், குட்டி பட்டாஸ் என்று மியூசிக் வீடியோவிலும் வலம் வந்துள்ளார். இப்படி சினிமா, சீரியல், வெப் சீரிஸ், மியூசிக் வீடியோ என்று பல அவதாரம் எடுத்திருந்தாலும் அஸ்வினுக்கு பேரும் புகழும் சேர்த்தது என்னவோ குக் வித் கோமாளி 2 என்ற சமையல் நிகழ்ச்சி தான்.
கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் அஸ்வின் குமார் லக்ஷ்மிநாதன். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட புகழ் மற்றும் ஷிவாங்கி ஆகியோரின் மூலமாக குறிப்பாக ஷிவாங்கியின் மூலமாக உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக பெண் ரசிகர்களிடையே அதிகளவில் பிரபலமும் ஆனார். பேட்டி கொடுக்கும் அளவிற்கு குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி அவரை வளர்த்துவிட்ட து. இதற்கெல்லாம் காரணம் ஷிவாங்கி தான் என்று பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வளவு ஏன், Most Popular Male in Reality Television என்ற பிரிவில் Behindwoods Gold Icons விருது பெற்றார். பட படங்கள், சீரியல்கள், வெப் சீரிஸ்கள் என்று பல வற்றையும் கடந்து ஒரேயொரு ரியாலிட்டி ஷோவின் மூலமாக பிரபலமான அஸ்வின் குமார் தொலைக்காட்சியில் அதிகம் விரும்பப்பட்ட 20 பிரபலங்களின் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.