Home celebrities VJ Anjana: மனைவிக்கு பாலியல் தொல்லை: புகார் அளித்த கயல் சந்திரன்!

VJ Anjana: மனைவிக்கு பாலியல் தொல்லை: புகார் அளித்த கயல் சந்திரன்!

264
0

தனது மனைவிக்கு பாலியல் தொடர்பான மெசேஜ்களை மர்ம நபர்கள் அனுப்பி வருவதாக தமிழ்நாடு காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக நடிகர் சந்திரன் என்ற சந்திரமௌலி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபகாலமாக பாலியல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதை நாம் அறிவோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, கேகே நகர் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அரசியல், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவின் கணவர் கயல் சந்திரன் என்ற சந்திரமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மனைவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக புகார் அளித்துள்ளதாக பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

இந்த இக்கட்டான பெருந்தொற்று காலத்தில் நான் காவல்துறையின் உதவியை நாடியிருக்கிறேன். + 91 96557 12265 என்ற நம்பரிலிருந்து எனது மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு பாலியல் தொடர்பான மெசேஜ்கள், துன்புறுத்தும் வகையிலான மெசேஜ்கள் வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த மர்ம நபர் மீது ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகார் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை ரீடுவிட் செய்த விஜே அஞ்சனா கூறியிருப்பதாவது: தனக்கு சில வருடங்களுக்கு முன்பு இதே போன்று ஒரு பிரச்சனை நிகழ்ந்த தாக கூறியுள்ளார். அது அப்போது சைபர் க்ரைம் பிரிவின் மூலமாக தீர்க்கப்பட்டது. இதே போன்று தற்போது மீண்டும் தொந்தரவுகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதனால், என்னால், சரிவர செயல்பட முடியவில்லை. இப்போது வந்திருக்கும் மெசேஜ்கள் என்னை பயமுறுத்தும் வகையில் இருப்பதாக பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articlePSBB School: பத்மா சேஷாத்ரி பள்ளி மூடப்பட வேண்டும்: விஷால்!
Next articleMehreen Kaur: திருமணத்தை தள்ளி வைத்த பட்டாஸ் பட நடிகை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here