Home celebrities Pandiraj Birthday: 35% படம் முடிஞ்சுருக்கு! July வரை time kodunga plz: சூர்யா40 அப்டேட்...

Pandiraj Birthday: 35% படம் முடிஞ்சுருக்கு! July வரை time kodunga plz: சூர்யா40 அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்!

340
0

இயக்குநர் பாண்டிராஜ் தனது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யாவின் 40ஆவது படம் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா நவரசா, வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா40 படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு அருணாச்சலம், தேவதர்ஷினி, டைகர் தங்கதுரை ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக சூர்யா40 படத்தின் பூஜையில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதன் பிறகு நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாக நடந்து வந்த படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொண்டுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் நேற்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா ரசிகர்களுக்கு சர்ஃப்ரைஸ் கொடுக்கும் வகையில், சூர்யா40 படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: #Suriya40 update Dear #AnbaanaFans 35% படம் முடிஞ்சுருக்கு. எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு . அடுத்த schedule Lockdown முடிஞ்சதும் start பண்ண வேண்டியதுதான் Our team Ready. Title Mass ah, Pre Anoucement ஓட வரும். July வரை time kodunga plz என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous article#ஜூன்22 தமிழன்திருவிழா: விஜய்யின் பிறந்தநாளை இப்பவே கொண்டாடும் ரசிகர்கள்!
Next articlePrachi Mishra: அப்பாவாக இருப்பது உற்சாகமாக இருக்கிறது: மகத்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here