நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என்று சூப்பர் டீலக்ஸ் பட த்தில் நடித்த நடிகை காயத்ரி ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, கடந்த 1 ஆம் தேதி முதல் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொடர்ந்து அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே சிம்ரன், அருண் விஜய், எம் எஸ் பாஸ்கர், ரஜினிகாந்த், நட்டி என்ற நடராஜன், கமல் ஹாசன், ராதிகா சரத்குமார் என்று பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகை காயத்ரி ஷங்கரும் தனது முதல் தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளார். ஆம், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, தனக்கு லேசான காயம் மற்றும் லேசான காயச்சலைத் தவிர வேறு எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒன்றாக இணைந்து போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram