Home celebrities படிக்கும் போது நானும் கசப்பான அனுபவித்தேன்: கௌரி கிஷான்!

படிக்கும் போது நானும் கசப்பான அனுபவித்தேன்: கௌரி கிஷான்!

297
0

அடையாறு பள்ளியில் படித்த போது தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை நடிகை கௌரி கிஷான் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் உள்ள கேகே நகர், பத்மா சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன். கடந்த 5 வருடங்களாக மாணிகளிடம் மிக மோசமாக நடந்து கொண்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆன் லைன் வகுப்புகளில் இடுப்பில் வெறும் துண்டு மட்டுமே கட்டிக் கொண்டு மாணவிகளுக்கு பாடம் எடுத்துள்ளார். அதோடு, மாணவிகளை தன்னுடன் படத்திற்கு வரும்படியும் மெஜேஜ் அனுப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது ராஜகோபாலன் புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இச்சம்பவம் போன்று தனக்கும் படிக்கும் போது நேர்ந்தது என்று நடிகை கௌரி கிஷான் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடையாறு பள்ளியில் படித்த போது, சாதியை வைத்து பேசுவது, மாணவ மாணவிகளின் உடல் அமைப்புகளை வைத்து கிண்டல் செய்வது, கேவலமாக பேசுவது போன்று கொடுமைகளை தான் மட்டுமல்லாமல், தன்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டதாக கூறியுள்ளார்.

தற்போது படிக்கும் மாணவிகளும் இது போன்ற சம்பவங்களை அனுபவித்தால், தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு, மாணவிகளின் பெயர்கள் வெளியில் செல்லாமல் பள்ளி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வழி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகணவரை அறையும் மேஜிக்கை கற்றுக்கொடுக்கும் விஜய் பட நடிகை அனிதா!
Next articleMOST DESIRABLE WOMEN ON TELEVISION 2020 பட்டியலில் ரம்யா பாண்டியன் நம்பர் 1 இடம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here