கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ரஜினியின் காலா, தல அஜித்தின் வலிமை பட நடிகை ஹூமா குரேஸி ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதோடு, கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும், படுக்கை வசதியும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை பட த்தில் நடித்துள்ள நடிகை ஹூமா குரேஸி, கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த தொற்று நோய்க்கு எதிரான போரில் குழந்தைகள் பாதுகாப்பு என்ற அமைப்புடன் இந்த முயற்சியை நான் மேற்கொண்டுள்ளேன். டெல்லியை அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம் என்று உறுதி ஏற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.