ஜனனி ஐயர் என்ற பெயரில் உள்ள ஐயர் என்ற சாதியை தூக்கி எறிந்து வெறும் ஜனனி என்று மாற்றம் செய்து கொண்ட நடிகை ஜனனிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜனனி ஐயர். கடந்த 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரு திரு திரு திரு என்ற பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையான அறிமுகமானார். ஆனால், இந்தப் படம் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. இதே போன்று விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படமும் கதாபாத்திரம் பேசவில்லை. அப்போது தான் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அவன் இவன் படத்தில் நடித்தார்.
அப்புறம் என்ன, பாகன், தெகிடி, அதே கண்கள், முப்பரிமாணம், பலூன், விதி மதி உல்டா, தர்மபிரபு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தொல்லைகாட்சி, கசட தபற, பாகீரா, யாக்கை திரி, முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். காலம் காலமாக இந்தியாவில் சாதி என்ற மூடப்படழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. மேல் சாதி, கீழ் சாதி என்ற பாகுபாடும் இன்னும் பல கிராமங்களில் பின்பற்றப்பட்ட வருகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அதிலிருந்து சாதியை வெளியேற்ற வேறு வழியின்றி சமூக அவலங்களை சகித்துக் கொண்டு மக்கள் அதிலேயே வாழ கற்றுக் கொண்டு வருகின்றனர். எந்த ஒரு விஷயத்தையும் சாதியை வைத்து மக்கள் தீர்மானிக்க தொடங்கிவிட்டனர். இவ்வளவு, ஏன் சமூகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதனையை சாதியை வைத்து அரசியல் செய்ய தொடங்கிவிட்டனர்.
இப்படியெல்லாம் இருக்கும் நிலையில், நடிகை ஜனனி ஐயர், டுவிட்டர் பக்கத்தில் தனது சாதியின் அடையாளமான ஐயர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வெறும் ஜனனி என்ற பெயரில் டுவிட்டர் கணக்கை தொடர்ந்து வருகிறார். அதோடு, அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாற்றம் ஒன்றே மாறாதது. என்றும் ஒற்றுமையுடன்- ஜனனி! என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜன்னியின் இந்த மாற்றத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், விக்கிபீடியா பக்கத்தில் ஜனனி ஐயர் என்ற பெயரே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#BeTheChangeYouWantToSee pic.twitter.com/3igfO0I5Ly
— Janani (@jananihere) May 28, 2021