Home celebrities Sita Movie: சீதாவுக்காக ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பாலிவுட் நடிகை!

Sita Movie: சீதாவுக்காக ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பாலிவுட் நடிகை!

333
0

பாலிவுட்டில் படமாகும் சீதா என்ற படத்திற்காக நடிகை கரீனா கபூர் ரூ.12 கோடி வரையில் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான் பாகுபலி படத்தைப் போன்று அனைத்து மொழிகளிலும் வரலாற்று கதைகளைக் கொண்ட படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் உருவாகி வரும் மரக்கார்: அரபிக் கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், தமன்னா, நயன்தாரா, விஜய் சேதுபதி என்று பிரபலங்கள் பலரும் நடித்திருந்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற படம் வெளியானது.

தற்போது தெலுங்கு சினிமாவில் ராமாயணக் கதையை கொண்ட ஆதிபுருஷ் என்ற படம் தயாராகி வருகிறது. கிட்டத்தட்ட ரூ.500 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் ராமன் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். ராவணனாக சயீப் அலிகான் நடிக்கிறார். தெலுங்கில் உருவாக்கப்பட்டு வரும் இந்தப் படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், பாலிவுட்டிலும் ராமாயணக் கதையை மையப்படுத்தி சீதா என்ற படம் உருவாக இருக்கிறது. இதில் சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரும் ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால், சம்பளம் மட்டும் ரூ.12 கோடி வரையில் கேட்டுள்ளார். ஆம், சீதா படத்திற்காக கிட்ட த்தட்ட ஒரு வருடம் வரையில் கால்ஷீட் கொடுக்க வேண்டி இருப்பதால் ரூ.12 கோடி கேட்டுள்ளாராம். ஆனால், கரீனா கபூர் ரூ.6 முதல் ரூ.8 கோடி வரையில் தான் இதுவரை சம்பளம் வாங்கி வந்துள்ளாராம்.

Previous articleமுதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட கழுகு பட நடிகை!
Next articleSimbu: விஜய் ஃபர்த்டே டிரீட் கொடுக்கும் சிம்பு: மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் ரிலீஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here