முகென் ராவ் நடிப்பில் உருவாகி வரும் வேலன் படத்தின் கேரக்டர் போஸ்டர் நாளை 10 மணிக்கு வெளியாக இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஆண்டுதோறும் கிடைத்து வரும் வரவேறு காரணமாக இந்நிகழ்ச்சியில் இதுவரையில் 4 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. பிக்பாஸ் தமிழ் 4 சீசன்களையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்கியுள்ளார். விரைவில், இந்நிகழ்ச்சியின் 5ஆவது சீசனும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் மலேசியாவைச் சேர்ந்த முகென் ராவ் டைட்டில் வின்னரானார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற முகென் ராவ் சினிமாவிலும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
இயக்குநர் கவின் மூர்த்தி இயக்கத்தில் முகென் ராவ் நடித்துள்ள படத்திற்கு வேலன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முகென் ராவிற்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜ் நடித்துள்ளார். மேலும், சூரியும் முக்கியமான கதாபாத்திரத்தில் அதுவும் மம்மூகா தினேஷன் என்ற ரோலில் நடித்துள்ளார். முகென் ராவிற்கு வில்லனாக ஹரீஷ் பேரடி நடித்துள்ளார்.
மேலும், ஜோ மல்லூரி, பில்லி முரளி, தம்பி ராமையா, லொள்ளு சபா சாமிநாதன், டிஎம் கார்த்திக், பிராங்க்ஸ்டர் ராகுல், பிரிகிதா சகா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கலைமகன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
அப்பா – மகன் உறவை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படம் தமிழன் மற்றும் மலையாளியை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. அண்மையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில், வேலன் பட த்தின் முகென் ராவின் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay tuned 🔥 10am tomorrow.
Production : Skymanfilms international
Producer : @Kalaimagan20
Director : @Kavin_dir pic.twitter.com/zlifEBfj1p— Mugen Rao (@themugenrao) May 13, 2021