அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள நரகாசூரன் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவங்கள் 16, மாஃபியா சேப்டர் 1 ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய படம் நரகாசூரன். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண், சந்தீன் கிஷான், ஆத்மிகா, கிட்டி, நளினிகாந்த் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். பத்ரி கஸ்தூரி, கார்த்திக் நரேன், கௌதம் மேனன் ஆகியோர் பலர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ரோன் எத்தன் யோகனன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இதுவரை வெளியாகாமல் இருந்தது. பல முறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி அதன் பிறகு தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர், ஓடிடி தளத்தில் வெளியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் கடைசியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
• YESS !! Finally ! @karthicknaren_M‘s Direction Film #Naragasooran Direct OTT Release On @SonyLIV. Signed. 👍🔥
• Follow : @OTTPlatForm Cinema and OTT
Deatil’s Update’s 🎟️ pic.twitter.com/8UWD6Oo2PT— OTT Platform ᵂᵉᵃʳ ᵃ ᴹᵃˢᵏ 😷 ™ (@OTTPlatform) May 28, 2021